திருவாரூர் தியாகராஜர் கோயிலில் திருவாதிரை விழா: ஜன.,5ல் மகா அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2022 10:12
திருவாரூர் : திருவாரூர் தியாகராஜர் கோயிலில் திருவாதிரை பெருவிழாவை முன்னிட்டு சுபகிருது வருடம், மார்கழி 20ம் நாள் (04.01.2023) புதன்கிழமை இரவு 9 மணிக்கு மேல் யதாஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அஜபா நடனம் ஆடி இராஜநாராயண மண்டபம் எழுந்தருளுகிறார். அதனைத் தொடர்ந்து மார்கழி 21 ( 05.01.2023 ) ஆம் நாள் வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் தியாகராஜ சுவாமிக்கு திருவாதிரை மகா அபிஷேகமும் அதனை தொடர்ந்து மார்கழி 22 ( 06.01.2023 ) ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு அ/மி தியாகராஜ சுவாமி தனது வலது பாதத்தினையும், அம்பிகை இடது பாதத்தோடு சோமாஸ்கந்தராக பதஞ்சலி வியாக்ர பாத முனிவர்களோடு நமக்கும் (காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில்) காட்சி தந்து நிறைவாக மீண்டும் அஜபா நடனத்தோடு யதாஸ்தானம் செல்லவிருக்கிறார். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.