பரமக்குடி: பரமக்குடியில் உள்ள அனைத்து கோவில்களும் மார்கழி உற்சவம் நடந்து வருகிறது. பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில், ஈஸ்வரன் கோயில், மீனாட்சி அம்மன், முத்தாலம்மன், அனுமன் கோயில், எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் என அனைத்து கோயில்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை பாடப்படுகிறது. பரமக்குடி யோக முனீஸ்வரர் கோயிலில் தினமும் காலை 5:45 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடக்கிறது. வரும் நாட்களில் வைகுண்ட ஏகாதசி விழா, அனுமன் ஜெயந்தி, ஆருத்ரா தரிசனம் என நடக்க உள்ளது.