சிவகாசி: சிவகாசி சிவன் கோயில் முன்பு விசுவ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் சார்பில் 13 வது ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. ஐந்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் முதல் நாளான நேற்று வாயு பகவான் ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் பிரதிஷ்டை விழா நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மாலை பஜனை நடந்தது. தினமும் மாலை 6:00 மணிக்கு பஜனை நடைபெறும். டிச. 25 ல் பொதுக்கூட்டம், அனுமன் ரதம் ஊர்வலம் நடைபெறும். ஏற்பாடுகளை விசுவ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் செய்தனர்.