புவனகிரி: கீழ்புவனகிரி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி வீதி உலா காட்சியுடன் அன்னதானம் வழங்கினர்.
கீழ்புவனகிரி ஆஞ்சநேயர் கோவிலில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு வீர ஆஞ்சநேயருக்கு அப்பகுதியினர் ஆண்டு தோறும் அனுமன்ஜெயந்தி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை வகு விமர்சியாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று காலை 11.00 மணிக்கு அபிேஷகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கினர். மாலையில் சுவாமி வீதியுலா காட்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவர் கம்பவுன்டர் மணி தலைமையிலான குழுவினர்கள் செய்திருந்தனர். சுற்றுபகுதியினர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.