வாடிப்பட்டி: நாகமலை புதுக்கோட்டை ஆனந்த ஐயப்பன் கோயிலில், ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 50ம் ஆண்டு பொன்விழா மண்டல பூஜை, அன்னதான விழா நடந்தது. இதை முன்னிட்டு லட்ச்சார்ச்சனை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனையை தொடர்ந்து ஊஞ்சல் சேவை நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு நையாண்டி மேளத்துடன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி திருத்தேர் வீதி உலா நடந்தது.
அலங்காநல்லுரர் அருகே முடுவார்பட்டி தர்மசாஸ்தா கோயிலில் மண்டல பூஜை 4 நாட்கள் நடந்தது.கன்னி பூஜை, 1008 திருவிளக்கு பூஜைகள் நடந்தன. 18 படிகளுக்கும் படி பூஜைகளை :பட்ட பக்தர்கள் பால்குட ஊர்வலம் எடுத்து சென்றனர். அவிநாசி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமிக்கு வேண்டுதல் நிறைவேற்றும் விதமாக அவிநாசி கிழக்கு ரத வீதியில் உள்ள காசி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குட ஊர்வலம் எடுத்து அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணிக்கு பாலபிஷேகம் செய்தனர். அதனையடுத்து மஹா தீபாராதனை நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து அன்னாபிஷேகமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் நடைபெற்றது. மேலும் சிறப்பு அலங்காரத்தில் மயில் வாகனத்தில் எழுந்தருளிய தண்டாயுதபாணி சுவாமி திருவீதி உலா மேளதாளத்துடன் நடைபெற்றது. இதில் ஏராளமான முருக பக்தர்கள் கலந்து கொண்டனர் .கடந்த 45 ஆண்டுகளாக பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்கள் இவ்வருடமும் வரும் 30ம் தேதி மதியம் பாதயாத்திரையை துவங்க உள்ளனர்.