செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் மெகா திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2022 05:12
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் 1500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட மெகா திருவிளக்கு பூஜை நடந்தது.
செங்சி கோட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணர் கோவிலில் நேற்று 7 ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு காலை 9 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கும், உற்சவருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 10 மணிக்கு வெங்கட்ரமணருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகம் முழுவதும் 1500 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட மெகா திருவிளக்கு பூஜை நடந்தது. ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவன தாளாளர் வழக்கறிஞர் ரங்கபூபதி திருவிளக்கு பூஜையை துவக்கி வைத்தார். விழா ஒருங்கிணைப்பாளர் வைகை தமிழ் முன்னிலை வகித்தார். குமார் ஐயர் திருவிளக்கு பூஜையை நடத்தினர். சுதர்சன பகாவதர் மற்றும் விழா குழுவினர், உபய தாரர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.