பதிவு செய்த நாள்
29
டிச
2022
10:12
மதுரை: கேரள மாநிலம் ஆரியங்காவில் தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்கம் சார்பில் தர்மசாஸ்தா சுவாமி – புஷ்கலா தேவி திருக்கல்யாண வைபவம் மண்டல பூஜையுடன் நிறைவு பெற்றது. சபரிமலையில் குடிகொண்டுள்ள சுவாமி ஐயப்பன் , தர்மசாஸ்தாவாக ஆரியங்காவில் இருக்கிறார்.
அவர் சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த புஷ்கலாதேவியை திருமணம் செய்துள்ளதால், சம்பந்தி உறவு முறையில் ஆண்டுதோறும் இத்திருக்கல்யாண வைபவத்தை மதுரை சவுராஷ்டிரா சமூகத்தினர் முன்னின்று நடத்தி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு டிச.24 ல் மணமகள் அழைப்பு ஊர்வலம் நடந்தது. டிச.25ல் ஆரியங்காவில் ‘பாண்டியன் முடிப்பு’ என்னும் நிச்சயதார்த்த நிகழ்ச் சி நடந்தது. நிச்சயதார்த்த சடங்குகளை சவுராஷ்டிரா மகாஜன சங்க பொதுச் செயலாளர் எஸ்.ஜெ .ராஜன் நடத்தி வைத்தார். டிச.26 ல் காலை மணக்கோலம் காட்டி திருமணவரம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10:00 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். இதில் திரளான கேரள மக்கள், மதுரை சவுராஷ்டிரா சமூகத்தினர், ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர். டிச.27 ல் பகவத்பாராயணம், கலசபூஜை,, களபாபிேஷகம், ராஜஅலங்காரம், தீபாராதனை மண்டல பூஜையுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்க மூத்த தலைவர் கே .எஸ்.ராகவன், தலைவர் டி.கே .சுப்ரமணியன் செய்திருந்தனர்.