திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயிலில் 46வது மண்டல பூஜையை முன்னிட்டு ஜனவரி 2ம் தேதி முள்படுக்கையில் ஸ்ரீலஸ்ரீ நாகராணி அம்மையார் அமர்ந்து அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 48 நாட்கள் விரதமிருந்து 9 வகை முட்கள் பரப்பி அதன்மீது அமர்ந்து அருள்வாக்கு கூறும் வைபவத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும் 108 சங்காபிஷேகம் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை மாரிமுத்து சுவாமிகள் உள்ளிட்ட பக்தர்கள் செய்து வருகின்றனர்.