திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை உற்ஸவத்தை முன்னிட்டு நாளை இரவு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அத்யான உத்ஸவம் 21 நடைபெறும். டிச. 23ல் பகல் பத்து உத்ஸவம் துவங்கியது. தினசரி மாலை 5:00 மணிக்கு பெருமாள் ஆண்டாள் சன்னதி எழுந்தருளி பூஜைகள் நடைபெற்றது. இன்று மாலை பகல் பத்து நிறைவடைகிறது.
வைகுண்ட ஏகாதசி உத்ஸவத்தை முன்னிட்டு நாளை காலை திருமாமணி மண்டபத்தில் உற்ஸவ பெருமாள் உபயநாச்சிமார்களுடன் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து மாலையில் அமர்ந்த கோலத்தில் ராஜாங்க சேவையிலும், இரவில் நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து உச்சிகால பூஜைகள் நடந்த பின்னர் இரவு 11:00 மணி அளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பரமபதவாசல் கடந்து செல்கிறார். பின்னர் தாயார் சன்னதி எழுந்தருளி பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து ராப்பத்து உத்ஸவம் துவங்குகிறது. தொடர்ந்து தினசரி தினசரி மாலையில் பெருமாள் சொர்க்கவாசல் எழுந்தருளல் நடைபெறும்.
* திருப்புத்தூர் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் நாளை காலை 9:15 மணி முதல் 10:15 மணிக்குள் சொர்க்கவாசல் திறக்கப்படும். இரவு 7:00 மணிக்கு நுாதன கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி திருவீதி புறப்பாடும் நடைபெறும்.
*திருப்புத்தூர் காரையூர் அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் நாளை காலை 9:30 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.
* திருப்புத்தூர் கொங்கரத்தி வன் புகழ் நாராயணப் பெருமாள் கோயிலில் நாளை காலை 9:00-10:00 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.
*திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் நாளை காலை 6:00 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.