காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசனம்: நடராஜருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2023 11:01
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று ஆருத்ரா(சிவபெருமானின் ஜென்ம நட்சத்திரம்) நட்சத்திரத்தை யொட்டி இன்று அதிகாலை (வெள்ளிக்கிழமை) 3:00 மணிக்கு 4 மாட வீதிகளில் கோயில் மணி ஒலி ஒலிக்கப்பட்டது .3.30 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க நடை திறக்கப்பட்டது 3.45 மணிக்கு திருமஞ்சன சேவை 4 மணிக்கு கோ பூஜையை தொடர்ந்து தேவாரம் காலை 4.30 மணிக்கு முதல் கால அபிஷேகம் (இதில் பக்தர்கள் ஈடுபட அனுமதி இல்லை) கோயில் சார்பில் மட்டுமே நடத்தப்பட்டது .இதனைத் தொடர்ந்து ஆருத்ரா நட்சத்திரம் என்பதால் காலை 7" மணிக்கு உளுந்து மாவினால் செய்யப்பட்ட லிங்கத்திற்கு நெய்யினால் அபிஷேகம் செய்தனர்.
(உளுந்து மாவினால் செய்யப்பட்ட லிங்கத்தை ஆவுடையார் அருகில் வைக்கப் பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த தரிசனம் மகா சிவராத்திரி பர்வ தினத்திற்கு சமமானதாக கருதப்படுகிறது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பக்தர்கள் கருதுகின்றனர். இந்த தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் . இதனைத் தொடர்ந்து காலை 11" மணிக்கு நடைபெறும் (உச்சிகால) அபிஷேகம் மூலவர் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு வெந்நீரால் அபிஷேகம் நடைபெற்றது. (இதுபோல் வெந்நீரில் அபிஷேகம் ஆண்டில் ஒரே ஒரு முறை ஆருத்ரா நட்சத்திரம் அன்று மட்டுமே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது). தொடர்ந்து( நடராஜர் உருவத்தில் உள்ள சிவபெருமானுக்கு )சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள நடராஜர் சுவாமி சன்னதி அருகில் சிவகாமி சுந்தரி சமேத நடராஜர் உற்சவ மூர்த்திகளை ஸ்தானபீடத்தில் நிறுத்தினர். தொடர்ந்து கலாச ஸ்தாபனம் செய்ததோடு கணபதி பூஜை நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதோடு கற்பூர ஆரத்திகளை சமர்ப்பித்தனர் .பின்னர் ஸ்தானப் பீடத்தில் வீற்றிருக்கும் சிவகாமி சுந்தரி சமேத நடராஜர் உச்சமூர்த்திகளுக்கு பால், தயிர் ,தேன் ,சந்தனம்,பஞ்சாமிர்தம், இளநீர் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இறுதியில் (கலச பிரதி ஷ்டையில் உள்ள) கலசத்தில் உள்ள ஜலத்தினால் நடராஜர் சுவாமி சிவகாமி சுந்தரி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து கற்பூர ஆரத்திகளை சமர்ப்பிக்கப்பட்டு உற்சவமூர்த்திகளுக்கு பல்வேறு சுகந்த மனம் கொண்ட புஷ்பங்களினால் சிறப்பு அலங்காரம் செய்ததோடு தீப தூப நெய்வேத்தியங்களை சமர்ப்பித்தனர் .தொடர்ந்து காலை 11:30 மணிக்கு சிவகாமி சுந்தரி நடராஜர் சாமி உற்சவமூர்த்திகள் நான்கு மாத வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு மற்றும் உறுப்பினர்கள் ,கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.