திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே இளையாத்தங்குடி கைலாசநாதர் நித்யகல்யாணி அம்பாள் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. நேற்று காலை 9:45 மணிக்கு சுவாமி, அம்பாள் நடராஜர் எழுந்தருளினர். நடராஜருக்கு கனிகள் படைக்கப்பட்டு, அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து தேவாரம்,திருவாசகம் ஓதப்பட்டு, அலங்காரத் தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி கோயிலிலிருந்புறப்பாடாகியது. காலை 10:15 மணிக்கு தேரில் நடராஜர் எழுந்தருளினர். பின்னர் தீபாரதனை நடந்து தேரோட்டம் துவங்கியது. கோயில் திருக்குளத்தை வலம் வந்தது. தேரோட்டத்தில் வடம் பிடிக்க சுற்றுப்புற இருபத்தியேழரை கிராமத்தினர் பங்கேற்றனர். ஏற்பாட்டினை இளையாத்தங்குடி ஸ்ரீ கைலாசநாதர் நித்யகல்யாணி தேவஸ்தான அறங்காவலர்கள் செய்தனர்.