இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 246வது உழவாரப்பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2023 01:01
தமிழகமெங்கும் பிரதி மாதம் 4 வது ஞாயிறு பழந்திருக்கோயில்களை சுத்தம் செய்தல் மற்றும் பாதுகாப்பதே தலையாய கடமையாக கொண்டு இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றம் இன்று 7 ம் தேதி மாலை 4.00 மணி முதல் நாளை 8 ம் தேதி ஞாயிற்று கிழமை மாலை 4.00 மணி வரை ஆந்திரா, சுருட்டபள்ளி, பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலில் தனது 246வது உழவாரப்பணியை செவ்வனே செய்கிறது. தொடர்ந்து, திருமுறை பாராயணம், கூட்டுப்பிரார்த்தனை நடைபெறுகிறது.
தொடர்புக்கு: எஸ். கணேசன் 9840 123 866 நிறுவனர் - இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம்