பதிவு செய்த நாள்
07
ஜன
2023
11:01
அவிநாசி: கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் வைப்புத்தலமாகவும். நடுச்சிதம்பரம் என போற்றக் கூடியதுமான சேவூரில், அறம் வளர்ந்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.
ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு திருவாதிரை நாச்சியார்,அங்காளம்மன் கோவிலிருந்து திருவீதி உலா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக சிவகாமியம்மாள் உடனமர் நடராஜ பெருமானுக்கு பஞ்சாமிர்தம், நெய், தேன், கரும்புச் சக்கரை,வில்வப்பொடி, நெல்லி பொடி, அரிசி மாவு, திருமஞ்சனம், மஞ்சள் பொடி தேங்காய் துருவல், மாதுளை பால்,ஆரஞ்ச், திராட்சை, அன்னாச்சிபழம், எலுமிச்சை, இளநீர், சந்தனம் உள்ளிட்ட 32 வகையான திரவியங்களால், ஆடல்வல்லானுக்கு மஹா அபிஷேகமும், புஷ்ப அலங்காரமும், மஹா தீபாராதனையுடன் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவில் வெளிப்புற வளாகத்தில் உள்ள அரச மரத்தடி விநாயகர் கோவிலை மூன்று முறை பட்டி சுற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்று. சேவூரின் முக்கிய வீதிகளின் வழியாக திருப்பூர் சிவனடியார்கள் திருக்கூட்டத்தாரின் கைலாய வாத்திய இசையுடன் சாமி திருவீதி உலா நடைபெற்றது.ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.