மேலுார்: மேலுார் சிவன் கோயிலில் மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் சிறப்பு அபிசேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. நேற்று திருவெம்பாவை பாடியதை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் தட்சினாமூர்த்தி, ராஜா தலைமையில் கேடய வாகனத்தில் நடராஜர், சிவகாமி அம்பாளுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதே போல் திருவாதவூரில் நடராஜர், சிவகாமி அம்பாள் தேரில் எழுந்தருளி கோயிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.