போடி: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு போடி சுப்பிரமணியர் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் தீபாரதனைகள் தக்கார் ராமதிலகம் தலைமையில் நடந்தது. உற்சவ மூர்த்திகளான சிவகாமி, மாணிக்கவாசகருடன் நடராஜர் அதிகாலை நகர் வலம் புரிந்தார். திருப்புகழ் சபையை சேர்ந்த பெண்கள் பஜனைகள் பாடினர். ஏற்பாடுகளை ஸ்ரீ சங்கர ஆவடையம்மாள் கழுவன் செட்டியார் உறவின் முறையினர் செய்திருந்தனர். திருவாதிரை பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரின் தரிசனம் பெற்றனர். சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர குருக்கள் செய்திருந்தார்.
* போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர், சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.