பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் கொடுவாயூரில் புகழ்பெற்ற கேரளபுரம் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலில் மார்கழி மாதம் தேர் திருவிழா விமர்சையாக நடப்பத்தப்படும்.
நடபாண்டு தேர் திருவிழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சுவாமி, கணபதி, வள்ளி தெய்வானை சுப்ரமணியர் ஆகிய உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி திரு தேர்தலில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கோவி வளாகத்தில் இருந்து ஆரம்பித்த ரத பிரயாணம் இரவு கோகுல தெருவில் முடிந்தன. தொடர்ந்து நேற்று பிற்பகல் 2 மணிக்கு செண்டை மேளம் முழங்க திருத்தேராட்டம் புனராரம்பித்தனர். கோகுலத் தெருவில் இருந்து ஆரம்பித்து மொக்கு தெரு, இரட்டை தெரு வழியாக உலா வந்த திருத்தேர்கள் இரவு கோவில் சன்னிதியில் வந்தடைந்தன. தொடர்ந்து வானவேடிக்கை நடந்தன. இரவு 11 மணிக்கு கலாமண்டலம் கேசவன்குட்டியின் தலைமையிலான குழுவின் "பஞ்சாரிமேளம்" என்று அழைக்கப்படும் செண்டை மேள நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து அதிகாலை பல்லக்கு கச்சேரி நடைபெற்றன. இதை யடுத்து கோவில் குளத்தில் அமைக்கும் தெப்பக்குளதேரில் விஸ்வநாத் சுவாமி உலா வரும் வைபவம் நடந்தன. பின்னர் பிரமாண்ட வானவேடிக்கை நடந்தன.