மேட்டுப்பாளையம்: கல்லாறு அருகே உள்ள அகத்தியர் ஞானபீடத்தில், சித்தர் நெறிமுறைப்படி சர்வதோச நிவாரண மூலிகை யாகம் நடந்தது.
மேட்டுப்பாளையம்
கல்லாறு அருகே அகத்தியர் ஞானபீடம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் குருபூஜை
யாகம் நடைபெறும். இந்த ஆண்டு ஞானபீடத்தின் இருபதாவது ஆண்டு குருபூஜை
விழாவும், சித்தர் நெறிமுறைப்படி சர்வ தோஷ நிவாரண மூலிகை யாகமும் நடந்தது.
முன்னதாக விநாயகர் பூஜையுடன் அகத்தியருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
தொடர்ந்து சொற்பொழிவும், சாதுக்களுக்கு மரியாதையும் செய்யப்பட்டன. அதன்
பின்னர் யாகத்தில் மூலிகை திரவியங்களான கருநொச்சி, அழுகண்ணி, தொழுகண்ணி,
கருங்காலி உள்ளிட்ட, 108 வகையான பச்சை மூலிகைகளைக் கொண்டு, திறந்த வெளியில்
பெரிய குண்டத்தில் யாகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, அகத்தியர்
ஞானபீட பீடாதிபதி மாதாஜி சரோஜினி செய்திருந்தார்.