சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் திருப்பாவை விழா நடந்தது. கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி தலைமை வகித்தார். கோயில் உதவி ஆணையர் கருணாகரன் பரிசுகள் வழங்கினார். மாணவ மாணவிகள் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல், கட்டுரை போட்டியில் கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது..சாத்துார், நத்தத்துப்பட்டி, இருக்கன்குடி, நென்மேனி பகுதியில் இருந்து பல மாணவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.