அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் உள்ள கோயிலில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோ பூஜை நடந்தது.
அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோசாலையில் கோமாதா பூஜை நடந்தது. பூஜையில் பசுக்களுக்கு வேஷ்டி, சேலை மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பூஜையில் அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜன், கோயில் டிரஸ்ட் ராஜரத்தினம், உறவின்முறை ஆலோசகர் மனோகரன், உறவின்முறை துணைத்தலைவர் முத்துக்குமார், செயலாளர் முத்துசாமி, பொருளாளர் செந்தூரான், எஸ்.பி.கே., பள்ளி கல்வி குழும நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.