கள்ளக்குறிச்சி: நீலமங்கலத்தில் கோதண்டராமர் வீதியுலா உற்சவம் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் சீதாலஷ்மண ஹனுமன் சமேத கோதண்டராமர் கோவில் நுாற்றாண்டை கடந்த பெருமை பெற்றது. கோவிலில் தை 5ம் நாளான நேற்று ஆற்றுத் திருவிழா உற்சவம்நடந்தது. விநாயகர் பூஜை, உற்சவர் சுவாமிகளுக்கு வேத பாராயண ஜபம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கலச அபிேஷகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. விஷ்ணு சகஸ்ரநாமம் வாசிக்கப்பட்டது. துளசியால் அர்ச்சனை நடந்தது. தேரோடும் வீதிகள் வழியாக கோதண்டராமர் வீதியுலா நடந்தது.