தக்கலை: முத்தலக்குறிச்சி ஸ்ரீ கூனான் காணி தர்மசாஸ்தா திருக்கோவில் 83 வது பஜனை பட்டாபிஷேக விழா, மகரவிளக்கு பெருவிழா, பொங்கல் திருவிழா ஆகிய முப்பெரும் விழாக்கள் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடந்தது. முதல்நாள்பஜனை பட்டாபிஷேகம், உச்சபூஜை , மாலையில் தீபாராதனை நடந்தது. இரண்டா ம் திருவிழா காலையில் மகரவிளக்கு பெருவிழா, திருவிளக்கு பூஜை நடந்தது. தாய் விளக்கை நெட் டாங்கோடு சாரதேஸ்வரி ஆசிரமயோகே ஸ்வரி வித்யாபுரி மாதாஜி ஏற்றினார். மூன்றாம் விழா காலையில் பந்திரடி பூஜை , வில்லிசை, மாலையில் சுமங்கலி பூஜை நடந்தன. பூஜை யில்திரளான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர். நான்காம் திருவிழா காலையில் அம்மனுக்கு பொங்கல், பிற்பகல் ராகுகால துர்கா பூஜை, இசை பட்டிமன்றம் நடந்தது. ஐந்தாம் நாள் விழா காலையில் அகண்ட நாம ஜெ பம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பல்சுவை சாகஜ நிகழ்ச்சிகள், சிறப்பு பூஜை ஆகியவை நடந்தன. விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.