பழநி: பழநி கோயிலில் கட்டண தரிசனத்திற்கு வழங்கப்படும் திட்டங்கள் ஸ்கேன் செய்த பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
பழநி, கோயில் கட்டண தரிசனம் டிக்கெட் ரூ.10,ரூ. 100 விலையில் மலைக் கோயிலில் கிடைக்கிறது. விசேஷ நாட்களில் ரூ.20, ரூ.200 விலையில் தரிசன டிக்கெட் கிடைக்கிறது. இந்நிலையில் கட்டண தரிசன டிக்கெட் முறைகேடுகளை தவிர்க்க டிக்கெட்களில் க்யூ.ஆர் கோடு பதியப்பட்டுள்ளது. அவற்றை கட்டண தரிசன வரியில் வரும் போது கோயில் பாதுகாவலர்கள் ஸ்கேன் செய்த பின் தரிசனத்திற்கு அனுமதி வழங்குகின்றனர்.