காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆண்டுதோறும் தை மாதத்தில் வனபோஜன உற்சவத்தையொட்டி, களக்காட்டூர் கிராமத்திற்கு செல்வார். இந்த ஆண்டு இந்த உற்சவம் வரும் 22 ம் தேதி நடக்கிறது. இதற்காக அன்று அதிகாலை, 4:30 மணிக்கு பெருமாள் கோவிலில் இருந்து புறப்படுகிறார். சுவாமி களக்காட்டூர் கிராமத்திற்கு காலை 9:00 மணிக்கு செல்வார். அக்கிராமத்தில் பெருமாள் வீதிவுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதையடுத்து அந்த கிராமத்தில் அமைந்துள்ள கரியமாணிக்க பெருமாள் கோவிலில் எழுந்தருள்வார். அங்கு வரதருக்கு மரியாதை செலுத்தப்படும். இதையடுத்து களக்காட்டூரில் இருந்து பறப்பட்டு பாலாற்றுக்கு பிற்பகல், 1:30 மணிக்கு செல்வார். ஆற்றில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருக்கு திருமஞ்சனம் நடைபெறும். மாலை 5:00 மணிக்கு அலங்காரம் முடிந்து பாலாற்றில் இருந்து புறப்பட்டு சதாவரம் வழியாக செல்வார். செல்லும் வழியில் பக்தர்கள் தரிசனம் நடைபெறும். இரவு 9:00 மணிக்கு வரதராஜ பெருமாள் கோவிலை சென்றடைவார்.