Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ... கட்டபொம்மன் வணங்கிய குலதெய்வம் கோவில் கட்டி கும்பாபிஷேகம் கட்டபொம்மன் வணங்கிய குலதெய்வம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கடையூர் அபிராமி கோயிலில் அமாவாசையை பௌர்ணமியாக்கிய திருவிளையாடல்
எழுத்தின் அளவு:
திருக்கடையூர் அபிராமி கோயிலில் அமாவாசையை பௌர்ணமியாக்கிய திருவிளையாடல்

பதிவு செய்த நாள்

22 ஜன
2023
07:01

மயிலாடுதுறை: புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அபிராமி அம்மன் அபிராமிபட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய திருவிளையாடல் வரலாறுப்படி நிகழ்த்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றதாகும். இங்கு தை அமாவாசை தினத்தன்று ஸ்ரீஅமிராமி அம்மனின் பக்தரான அபிராமிபட்டர் வழிபட அந்த நேரத்தில் கோயிலுக்கு வந்த சரபோஜி மன்னர் இன்று என்ன திதி என்று கேட்டார். அபிராமி பட்டர் அபிராமி அம்மனை நினைத்து தியானத்தில் இருந்த நிலையில், பௌர்ணமி தினம் என்று தவறுதலாக  கூறினார். இன்று பௌர்ணமி வரவில்லை என்றால் மரணதண்டனை விதிக்கப்படும் என்று மன்னர் கூறினார். இதனையடுத்து  அபிராமி பட்டர் எரியும் நெருப்பிற்கு மேலே ஊஞ்சல் அமைத்து அபிராமி அம்மனை நினைத்து அபிராமி அந்தாதியை பாடினார். 100 கயிறுகள் கொண்ட ஊஞ்சலில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு கயிறாக அறுத்துக்கொண்டு வரும்போது 79வது பாடலான “விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு
எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே
செய்து, பாழ் நரகக் குழிக்கே
அழுந்தும் கயவர் தம்மோடு
என்ன கூட்டு இனியே? " என்ற பாடலை பாடினார். அப்பொது அம்மன் நேரில் தோன்றி தனது தோட்டை வீசி எறிந்து முழுநிலவை தோன்றச்செய்து அபிராமி பட்டருக்கு அருள் வழங்கியதாக ஆலய வரலாறு கூறுகின்றது.  அதன்படி தை அமாவாசையான இன்று அபிராமி பட்டரின் உயிரை காப்பாற்றுவதற்காக அபிராமி அம்மன் நேரில் தோன்றி தை அமாவாசையை பௌர்ணமி ஆக்கிய நிகழ்வு நடத்தப்பட்டது. இரவு மகா மண்டபத்தில் அபிராமி பட்டர் சிலை வைக்கப்பட்டு  ஸ்ரீ அபிராமி அம்மன் வெள்ளி  விமானத்தில் எழுந்தருளினார்.   தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் ஓதுவார்கள் அபிராமி அந்தாதியின்    பாடல்களை பாடினர். ஓவ்வொரு பாடலுக்கும் அம்பாளுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்று கயிறு அறுக்கப்பட்டது. 79 பாடலின் முடிவில் நிலவு போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்ட மின் விளக்கு எரியவிடப்பட்டது. தொடர்ந்து அம்பாளுக்கு மஹா தீபாராதனை நடத்தப்பட்டு 100 பாடல்கள் பாடி நிறைவு செய்யப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனை வழிபட மிக சிறந்த நாளில் ஒன்று பிரதோஷ தினம். இன்று நந்தியின் கொம்புகளுக்கு இடையில் சிவன் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஆதி பிரம்மோத்ஸம் பங்குனி ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி ஆனந்தவல்லி அம்மை வலம் கொண்ட அகத்தீஸ்வரர் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவ விழா, கடந்த ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. சிவகாசி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர உத்சவம் சிறப்பாக துவங்கி நடைபெற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar