பதிவு செய்த நாள்
25
ஜன
2023
08:01
பழநி: பழநி, மலைக்கோயிலில் கும்பாபிஷேக பூஜையில் வேள்விச்சாலை யாகம் இரண்டாவது நாளாக நடைபெற்றது.
பழநி, மலைக்கோயில், படிப்பாதை கோயில்களுக்கு ஜன.26, மலைகோயில் மூலவர் சன்னதிக்கு ஜன.,27,ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. நேற்று (ஜன.24) காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால வேள்வி மலைக்கோயில் வேள்விச்சாலையில் நடைபெற்றது. இதில் கணபதி பூஜை, கலச வழிபாடு நடைபெற்று, கந்தபுராணம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், திருமுறை முற்றோதல் நடந்தது. கந்தவேல் வேள்விச்சாலையில் முன் திருமஞ்சன நீராட்டு, 96 மூலிகை, விதை, வேர், தண்டு, பூ, காய், கனி, கிழங்கு, வாசனை திரவியங்கள், அருஞ்சுவை சாதம், பழங்காரம், சுண்டல், பாயாசம், பால்,தேன், நெய் 12 வகை மூலிகை வேள்வி நடைபெற்றது. காலை 11:45 மணிக்கு நிறைவேள்வி நடைபெற்றது. மாலை 5:30 மணிக்கு மூன்றாம் கால வேள்வி துவங்கியது. முதல் நிலை வழிபாடு புனித கலச வழிபாடு சங்கராபரணம் பைரவி கரகரப்பிரியா நாராயணி நடைபெற்றது. ஐந்து மந்திர ஆறங்க வேள்வி, வேள்விச்சாலை தீபாராதனை, சுள்ளிகுண்ட பூஜை, சிறப்பு பூஜை, நடைபெற்றது. இரவு 8:30 மணிக்கு நிறைவேள்வியில் பட்டாடை ஆகுதி, பன்னிரு திருமுறை விண்ணப்பம், ராக கீதங்கள் தீபாதாரணை நடைபெற்றது. இன்று (ஜன.25) நான்காம் கால வேள்வி காலை 9:00 மணிக்கு துவங்கும். நிறைவேள்வி காலை 12: 45 மணிக்கு துவங்கும். ஐந்தாம் கால வேள்வி மாலை 5:30 மணிக்கு நிறைவேள்வி 8:30 மணிக்கும நடைபெற உள்ளது.