திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2023 12:01
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா 6ம்நாள் விழாவில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடாகினர். தங்கமயில் வாகனத்தில் சுவாமி தெய்வானை, வெள்ளி ரிஷப வாகனத்தில் பரங்கிரிநாதர், பிரியாவிடை, மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் ஆவுடைநாயகி அம்பாள், சீவிலிநாயகர், திருஞானசம்பந்தர் 16கால் மண்டபத்தில் எழுந்தருளினர். சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை முடிந்து புராண கதையை கோயில் ஓதுவார் கூறினார். தீபாராதனை முடிந்து வீதி உலா நிகழ்ச்சியில் சுவாமிகள் அருள்பாலித்தனர்.