திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் தைப்பூச திருவிழாவில் நேற்று நெல்லுக்கு வேலியிட்ட வைபவம் நடந்தது.
நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 11 நாட்கள் நடக்கிறது. விழாவின் 4ம் ளான நேற்று மதியம் நெல்லுக்கு வேலியிட்ட வைபவம் நந்தது. இதில் முற்காலத்தில் வாழ்ந்த வேதபட்டர், சுவாமிக்கு அமுது படைக்க யாசகமாக பெற்ற நெல்லை காயவைத்து விட்டு தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது பலத்த மழை பெய்ததால் இறைவனுக்கு யவைத்த நெல் மழையில் நனைந்து விடுமோ என்ற அச்சத்துடன் வேதபட்டர், இறைவனை வேண்டி ஆற்றிலிருந்து புறப்பட்டு நெல் காயவைக்கப்பட்டிருந்த இடத்திற்கு ந்தார். ஆனால் நெல் மணிகள் மழையில் நனையாமல் வேலியிட்டு இறைவன் காத்து நின்றார். நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் ‘திருநெல்வேலி’ என பெயர் பெற காரணமாக அமைந்தது. இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் நெல்லையப்பர் கோயில் தைப்பூச திருவிழாவின் 4ம் ள் இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நடக்கிறது. அப்போது கோயிலில் நெல் காயவைக்கப்பட்டது போலவும், மழை பெய்தது போலவும், மழையிலிருந்து நெல் மணிகள் வேலியிட்டு காத்தது போன்ற நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இரவு ஞ்சமூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் ரத வீதி உலா நடந்தது. வரும் 4ம் தேதி தைப்பூச தீர்த்தவாரி கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தைப்பூச மண்டபத்தில் நடக்கிறது.