பதிவு செய்த நாள்
30
ஜன
2023
05:01
மனக் கவலைகளை தீர்க்கும் முருகனாய், அனைத்தையும் அறிந்து அருள் புரியும் ஆறுமுகனாய், காலங்களை வென்ற கார் த்திகேயனாய், கர்ம வினைகளை போக்கு ம் கந்தனாய், வீண் பேச்சு வேந்தர்களை வீழ்த்தும் வேலவனாய் இருக்கும் அந்த ஈசன் புதல்வன் அருள் கிடைக்க தை கிருத்திகை நன்னாளில் பிரார்த்திப்போம்.
முருகனுக்கு விசேஷமான நாட்கள் வருடம் முழுதும் பல உள்ளன. சொல்லப்போனால், ஒவ்வொரு நாளும் அழகன் முருகனுக்கு உகந்த நாள்தான். ஆனால் சில நாட்களில் முருகனை மனம் முழுக்க நிரப்பி, விரதம் இருந்து மனமுருக வேண்டினால், அன்று நம் பிரார்த்தனைக ளுக்கு கார்த்திகேயன் கண்டிப்பாக செவி மடுப்பான் என்பது நிச்சயம். அப்படிப்பட்ட புனித நாட்களில் ஒன்றுதான் தை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப் படும் தை கிருத்திகை திருநாளாகும். முருக பக்தர்களுக்கு தை கிருத்திகை மிக வும் உகந்த நாளாகும். உலகுக்கே அம்மை யப்பனான சிவபெருமானுக்கும் உமையா ளுக்கும் அன்பு மகனாக பிறந்த முருகரை ஆறு கார்த்திகைப் பெண்கள் அன்போடும் பாசத்தோடும் கவனித்துக் கொண்டனர். அவர்கள் முருகன் மீது கொண்ட பாசத்தி ற்கும் அன்புக்கும் பரிசாக அவர்களுக்கு சிவபெருமான் நட்சத்திர நிலையை வழங்கினார். கிருத்திகை நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும் வந்தாலும், ஆடி கிருத்திகை மற்றும் தை கிருத்திகைக்கு சிறப்பம்சம் உண்டு. இந்த நாட்களில் முருகனையும் கார்த்தி கைப் பெண்களையும் வணங்கினால், நமக்காக கார்த்திகைப் பெண்களும் முருகனிடம் சிபாரிசு செய்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நாட்களில் செய்யப் படும் வேண்டுதல் நிறைவேறுவது உறுதி.
தை கிருத்திகையின் வரலாறு:
ஸ்கந்த புராணத்தின் படி, முருக பகவான் சிவனின் மூன்றாவது கண்ணிலிருந்து ஆறு தீப்பிழம்புகளாகத் தோன்றினார். அக்னி பகவானும் வாயு பகவானும் ஆறு தீப்பிழம்புகளாய் அவதரித்த முருகனை சரவணப் பொய்கைக்கு கொண்டு சென்ற னர். அங்கு ஆறு தாமரை மலர்களில் ஆறு பிள்ளைகளாய் தோன்றிய முருகரை கன்னிப்பெண்களான ஆறு கார்த்திகைப் பெண்களும் கவனித்துக் கொண்டனர்.
உலகெல்லாம் உள்ள தமிழர்களின் இஷ்ட தெய்வமாக முருகர் இருக்கிறார். கிருத்தி கை நாட்களில் முருகனை வணங்கினால் அவரது பக்தர்களின் பிரார்த்தனை நிச்ச யம் நிறைவேறும் என்று சிவபெருமான் முருகருக்கு உறுதி அளித்ததாக நம்பப் படுகிறது. தை கிருத்திகையன்று வீடுகளில் உள்ள முருகர் படத்திற்கு சந்தன, குங்குமம் இட் டு, மலர் சூட்டி, முருகனுடைய திருப்புகழ், கந்த சஷ்டி கவசம் ஆகிய மந்திர பாடல்க ளை பாடி முருகனை வழிபட வேண்டும். ஆறு விதமான பூக்களைக் கொண்டு முரு கனுக்கு அர்ச்சனை செய்தால் விசேஷ்ம. பின்னர் தூப, தீப, ஆராதனைகள் காண்பி த்து, நம்மால் ஆன பதார்த்தங்களை நைவேத்தியம் செய்து சூடம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த நாளில் விரதமிருந்து முருகனை வணங்குவது விசேஷமாகக் கருதப்படுகி ன்றது. எனினும், நம் இந்து மதத்தைப் பொறுத்தவரை, உடலை வருத்தி கொண் டு தான் ஒருவர் கடவுளை வணங்க வேண் டும் என எங்கும் குறிப்பிடப்படவில்லை. அவரவர் சக்தி, உடல் நிலைக்கேற்ப பிரா ர்த்தனைகளை மேற்கொள்ளலாம். மனதி ல் நம்பிக்கையும் பக்தியும் இருந்தால் போதும்.