கடலுார் முருகன் கோவில்களில் தை கிருத்திகை வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2023 12:01
கடலுார்: தை கிருத்திகையை முன்னிட்டு, கடலுார் பகுதி முருகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. முருகருக்கு உகந்த தை கிருத்திகை தினமான நேற்று, கடலுார் பகுதிகளில் உள்ள முருகர் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பாடலீஸ்வரர் கோவில், வண்டிப்பாளையம் மற்றும் புதுப்பாளையம் சிவசுப்ரமணியர் கோவில், கூத்தப்பாக்கம் பாலதண்டாயுதபாணி கோவில், மேல்பட்டாம்பாக்கம் சிவசுப்ரமணியசுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் காலையில் முருகருக்கு மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.