அன்னூர்: மொண்டிபாளையம் பெருமாள் கோவிலில், பெருமாள் சிம்ம வாகனத்தில் உலா வந்து அருள் பாலித்தார்.
மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில், மேலத் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. 300 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் 56ம் ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 29ம் தேதி இரவு ஸ்ரீதேவி, பூதேவி, சமேதரராக வெங்கடேச பெருமாள் தேரோடும் வீதியில் உலா வந்து அருள் பாலித்தார். நேற்று இரவு பெருமாள் அனுமந்த வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் உலா வந்தார். இன்று இரவு கருட வாகனத்தில் சுவாமி உலா நடக்கிறது. நாளை (பிப். 1ம் தேதி) காலை 10:00 மணிக்கு அம்மன் அழைத்தலும், வெங்கடேச பெருமாள் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. பிப். 2ம் தேதி இரவு யானை வாகன உலா நடக்கிறது. பிப். 3ம் தேதி காலை 11:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.