பெரியகுளம்: உலக நன்மைக்காக நாமத்வாரில் சிறப்பு சத்சங்கம் நிகழ்ச்சியில் டாக்டர் பாக்யநாதன் பேசினார். பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ஜன. 18 முதல் பிப்., 4 வரை 18 நாட்கள் தினமும் காலை 7:00 மணி முதல் இரவு 7:00 வரை 216 மணி நேரம் ஹரே ராம சங்கீர்த்தனம் உலக நன்மைக்காக நடந்து வருகிறது. முரளீதரசுவாமி சீடர் டாக்டர் பாக்யநாதன் ஆன்மிக சொற்பொழிவு சத்சங்கம் நடத்தினார். ஏராளமான பக்தர்கள் கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்றனர். பக்தர்களின் கேள்விக்கு, பதில் அளித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பொறுப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.