சிவகாசி: சிவகாசி பஸ் ஸ்டாண்டில் உள்ள துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 7 ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. காலை 6:00 மணிக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அம்மன் பல்லக்கில் ரத வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ் பிரியா, ஒன்றிய துணைத் தலைவர் விவேகன் ராஜ் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பஸ்டாண்டு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் செய்தனர்.