இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2023 08:02
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொரோனா தடை உத்தரவால் இரண்டு ஆண்டுகள் உள் திருவிழாவாக நடத்தப்பட்ட தெப்பத் திருவிழா நேற்று பக்தர்கள் பங்கேற்க தெப்பக்குளத்தில் நடந்தது. கோயிலில் ஜன.,22ல் கொடியேற்றத்துடன் இத்திருவிழா துவங்கியது. நேற்று காலை தெப்பக்குளம் மிதவை தெப்பத்தில் சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்பம் மூன்று சுற்றுக்கள் சுற்றி வந்தன. இரவு 7:00 மணிக்கு தெப்பக்குள மைய மண்டப ஊஞ்சலில் சுவாமி, தெய்வானை எழுத்தருளி பக்தி உலாத்துதல் முடிந்து மீண்டும் மிதவை தெப்பத்தில் எழுத்தருளினர். தெப்பம் மூன்றுமுறை வலம் வந்தது. தெப்பத்திருவிழா முடிந்து பக்தர்கள் திருக்கண் மண்டகப்படிகளை தொடர்ந்து சுவாமி சன்னதி தெருவில் சொக்கநாதர் கோயில் முன்பு எழுந்தருளினார். அங்கு சூரசம்ஹார லீலை நடந்தது.