சிதம்பரம்: சிதம்பரத்தில் உலக நன்மையை கருதி மகா சண்டியாகம் நடைபெற்றது. சிதம்பரம் ஸ்ரீ பாலா குரு சேவா மண்டலி சார்பில் உலக நன்மை கருதி ஸ்ரீ பாலா மகா திரிபுரசுந்தரிக்கு நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மங்கல தசமி மகா சண்டியாகம் சிதம்பரம் நடராஜ நகர் DSC_12 வித்யா பால பீடத்தில் நேற்று காலை நடைபெற்றது. செல்வரத்தின தீட்சிதர் தலைமையிலான ஆச்சாரியார்கள் மகா சண்டியாகத்தை சிறப்பாக நடத்தினர். சண்டியாகத்தை முன்னிட்டு மகா திரிபுரசுந்தரிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சங்கல்பம் செய்து தரிசித்தனர்.