வத்தலக்குண்டு: வத்தலக்குண்டில் ஊர்காலன் சாமி பழனி பாதயாத்திரை குழுவினர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் முத்துமாரியம்மன் கோயிலில் உள்ள முருகனுக்கு 11 வகை அபிஷேகங்கள் நடத்தி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். தி.மு.க., நகர செயலாளர் சின்னதுரை, பேரூராட்சி தலைவர் சிதம்பரம், துணைத் தலைவர் தர்மலிங்கம், முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணி குழு தலைவர் அன்பு, நகர கூட்டுறவு வங்கி தலைவர் கணேசன், கணவாய்பட்டி ஊராட்சி தலைவர் ரமேஷ், பாதயாத்திரை குழுவினர் பங்கேற்றனர்.