புதுச்சேரி : சாரம் நாகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. புதுச்சேரி, சாரம் முத்து விநாயகர், வள்ளி தேவசேனா சுப்ரமணிய சுவாமி, நாகமுத்து மாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டதையொட்டி இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதற்கான பூஜை நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. மாலை யாக பூஜை நடந்தது. நேற்று இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி நடந்தது. இன்று காலை நான்காம் கால யாக பூஜை, நாடிசந்தானம், தத்வார்ச்சனை, அஸ்த்ர ேஹாமம் நடக்கிறது. காலை 9 மணிக்கு யாத்ராதானத்தை தொடர்ந்து கடம் புறப்பாடாகி காலை 9.30 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் கோபுரங்களுக்கும், 9.45 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கும், 10 மணிக்கு மூலவ மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 6.00 மணிக்கு வள்ளி தேவசேனா, சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. நாளை 2ம் தேதி முதல் மண்டலாபிஷேக பூஜைகள் துவங்குகிறது