பதிவு செய்த நாள்
01
பிப்
2023
05:02
சிவகாசி: சிவகாசி பத்திரகாளியம்மன் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
சிவகாசியில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் 2009 ல் கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேக விழா நடந்தது. ஜன. 23 ல் கொடி மரத்திற்கு தங்க கவசம் சாத்தும் நிகழ்ச்சியுடன் துவங்கிய விழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஜன. 30 ல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை புண்யாக வாசனம், பஞ்சகவ்ய பூஜை, பாத்ர பூஜை, தன பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. ஜன 31 ல் விக்னேஸ்வர பூஜை, விஷேச சந்தி, பூதகத்தி, தீபாராதனை பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று காலையில் கோயில் ராஜகோபுரம், மூலஸ்தான ஸ்வர்ண விமானம், பரிவார விமான கோபுரங்கள், மூலஸ்தானம், பரிவார மூர்த்திகளுக்கு நடந்த மகா கும்பாபிஷேகத்தில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.