பதிவு செய்த நாள்
02
பிப்
2023
10:02
ராமேஸ்வரம்: பிப்., 5ல் தைப்பூச தெப்ப தேரோட்டம் யொட்டி ராமேஸ்வரம் திருக்கோயில் நடை சாத்தப்படும் என கோயில் துணை ஆணையர் தெரிவித்தார்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உபகோயிலான லட்சுமணேஸ்வரர் கோயிலில் உள்ள தெப்பத்தில் பிப்., 4ல் இரவு 7 மணிக்கு பிள்ளையார் தெப்ப தேரோட்டம் நடக்கும். பிப்., 5ல் தைப்பூசம் யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் காலை 5 முதல் 5:30 மணி வரை ஸ்படிக லிங்கம் பூஜையும், அதனைதொடர்ந்து கால, சாயரட்சை பூஜைகள் வரை நடக்கும். பின் காலை 10 மணிக்கு மேல் சுவாமி, அம்மன், பஞ்சமூர்த்திகளுடன் லட்சுமணேஸ்வரர் கோயிலுக்கு புறப்பாடானதும், திருக்கோயில் நடை சாத்தப்படும். பின் பகல் 1:30 மணிக்கு லட்சுமணர் தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும், மாலை 5 மணிக்கு மேல் தெப்ப மண்டபத்தில் தீபாராதனையும் நடக்கும். மாலை 6 மணிக்கு மேல் லட்சுமணர் தீர்த்த தெப்பத்தில் தைப்பூச தேரோட்ட உற்சவம் நடக்கும். இரவு 8 மணிக்கு மேல் சுவாமி, அம்மனுக்கு தீபாராதனை நடக்கும். பின் பஞ்சமூர்த்திகள் திருக்கோயிலுக்கு வந்தவுடன் அர்த்தசாம, பள்ளியறை பூஜைகள் நடக்கும். டிச., 5 திருக்கோயிலில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடை சாத்தப்படும் என பக்தர்களுக்கு கோயில் துணை ஆணையர் மாரியப்பன் தெரிவித்தார்.