பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் பாலாலய விழா நடந்தது. இக்கோயிலில் ராஜகோபுரம், விமானம் உள்ளிட்ட பிரகாரங்களில் புணரமைப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனை ஒட்டி நேற்று காலை 9:00 மணிக்கு பாலாலய பூஜை அனுக்கையுடன் துவங்கியது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, கலாகர்சனம், யாகசாலை பிரவேசம், யாகசாலை பூஜைகள், பஞ்ச சூக்த ஹோமம் நடந்தன. பின்னர் 10:00 மணிக்கு மேல் மகாபூர்ணாகுதி நிறைவடைந்து ராஜகோபுரம், புண்ணிய கோடி விமான படங்களுக்கு பாலாலய மகா அபிஷேசம் நடந்தது. பின்னர் தீப ஆராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர தர்ம பரிபாலன சபையார் செய்திருந்தனர்.