பதிவு செய்த நாள்
02
பிப்
2023
04:02
கருமத்தம்பட்டி: பழனியில் நடக்கும் தைப்பூச வழிபாட்டில் பங்கேற்க, முருக பக்தர்கள் காவடிகளுடன் பாத யாத்திரையை துவக்கியுள்ளனர்.
பழனி, சென்னிமலை, சிவ்ன் மலை, மருதமலை உள்ளிட்ட முருகன் கோவில்களில், வரும் 5 ம்தேதி தைப்பூச தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி, கருமத்தம்பட்டி, சூலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த முருக பக்தர்கள் பாதயாத்திரையை துவக்கியுள்ளனர். நேற்று முன்தினம் கருமத்தம்பட்டி அடுத்த ஊஞ்சப்பாளையத்தை சேர்ந்த முருக பக்தர்கள் மற்றும் காவடி குழுவினர் பாதயாத்திரையை துவக்கினர். கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டு, பல்வேறு வகையான காவடிகளை சுமந்து, பெண்கள், சிறுமிகள் பாதயாத்திரை புறப்பட்டனர். இதேபோல், வடுகபாளையத்தை சேர்ந்த முருக பக்தர்கள் காவடி பூஜை செய்து, பழநிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.