காரமடை அரங்கநாதர் சுவாமி கோயிலில் மாசி மக தேரோட்ட வைபவம் பிப்ரவரி 28 தொடங்குகிறது.
கொங்கு நாட்டில் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். பக்கிறது வருஷம் 2023 பிப்ரவரி மாதம் 27ஆம் நாள் இரவு கிராம சாந்தியில் தொடங்கி 28 செவ்வாய்க்கிழமை காலை ரோஜா ரோகனும் என்னும் கொடியேற்ற நிகழ்வும் அன்று மாலை அன்ன வாகனம் தொடர்ந்து மார்ச் மாதம் ஒன்றாம் தேதி சிம்ம வாகனம் 2ம் தேதி அனுமந்த வாகனம் 3ல் கருட சேவையும் நான்காம் தேதி பெட்டத்தம்மன் அழைப்பு புஷ்ப பல்லுக்கும் 5ம் தேதி அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் திருக்கல்யாண உற்சவம் இரவு யானை வாகன திருவீதி உலா 6ம் தேதி அதிகாலையில் ரதா ரோகனம் இன்னும் திருத்தேருக்கு எழுந்தருளல் அன்று மதியம் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் ஏழாம் தேதி பரிவேட்டை வந்த சேவையும் எட்டாம் தேதி தெப்போற்சவம் ஒன்பதாம் தேதி சந்தான சேவை பத்தாம் தேதி வசந்தத்துடன் பிரம்மோற்சவ வைபவம் நிறைவடைகிறது. தக்கார் கருணாநிதி அலுவலர் லோகநாதன் ஏற்பாட்டினை கவனித்து வருகின்றனர்.