பழநி: பழநி முருகன் கோயிலுக்கு நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து வந்தனர்.
பழநி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா நடைபெற்று வரும் நிலையில் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக காவடி எடுத்து வருகை புரிகின்றனர். இந்நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். பழநி அடிவாரம் பகுதியில் இரண்டு ராட்சத கிரேனில் பறவைக்காவடி எடுத்து வந்தனர். அலகு குத்தி பழநி மலைக்கோயில் கிரி வீதியில் வலம் வந்தனர். கடந்த 20 ஆண்டுகளாக பால்காவடி தீர்த்த காவடி மயில் காவடி எடுத்து வருகின்றனர். சேந்தமங்கலத்தில் இருந்து 1000திற்கும் மேற்பட்டோர் பாதயாத்திரையாக வருகை புரிந்தனர்.