பதிவு செய்த நாள்
02
பிப்
2023
05:02
போடி: போடி அருகே ரெங்கநாதபுரத்தில் தேவாங்கர் மகாஜன சபைக்கு பாத்தியப்பட்ட இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.
வேண்டியவருக்கு வேண்டிய வரம் தரும் வகையில் போடி அருகே ரெங்கநாதபுரத்தில் தேவாங்கர் மகாஜன சபைக்கு பாத்தியப்பட்ட இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த மூன்று நாட்களாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கும்பாபிஷேக யாக குண்டல ஹோமம் நடைபெற்றது. புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை யாகசாலையில் வைத்து பூஜைகள் செய்தனர்.
கும்பாபிஷேகம் தேவாங்கர் மகாஜன சபை செட்டுமை ரங்கராஜ், பெரியதனம் ஜெயகிருஷ்ணன், தலைவர் ஸ்ரீராம் தலைமையில் நடந்தது. செயலாளர்கள் நித்யானந்தன், சிவக்குமார், பொருளாளர் குணசேகரன், உப தலைவர்கள் வீரபத்திரன், ராஜகோபால் நிர்வாகஸ்தர்கள் ஜெயபாலன், வினோத்குமார், ரவிச்சந்திரன், பாபு, சந்திரசேகரன், சிவப்பிரகாஷ், செந்தில்குமார், சுந்தரராஜன், பிரேம்குமார் முன்னிலை வகித்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 9.30 மணியளவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. இராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் தரிசனம் பெற்றனர். விழா கமிட்டி சேர்ந்த சுரேஷ்குமார், ஜனார்த்தனன், விஜயகண்ணன், பார்த்திபன், தீபிகா கார்மெண்ட்ஸ் உரிமையாளர் வைரமணி, பில்டிங் காண்ட்ராக்டர் பாலுச்சாமி, ஏ.எம். கார்மெண்ட்ஸ் உரிமையாளர் முருகன், ஸ்ரீ கிருஷ்ணா டிரேடிங் கம்பெனி உரிமையாளர் ஸ்ரீராம், மல்லிகை மோட்டார்ஸ் உரிமையாளர்கள் சொரூபன், பாரத்ஆனந்த், ஆசிரியர்கள் தனராஜ், ரங்கசாமி, அர்ச்சனா கார்மெண்ட்ஸ் உரிமையாளர் வீரபத்திரன், முன்னாள் மாவட்ட சுற்றுலா அலுவலர் குணசேகரன், ஜாகல் குரூப் நிர்வாக இயக்குனர் நந்தகோபால கிருஷ்ணன், கார்மெண்ட்ஸ் உரிமையாளர் முருகதாஸ், அரசு பஸ் கண்டக்டர் தேவதாஸ், பி.வி.ஜி., டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.