புக்குளம் பெரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02பிப் 2023 05:02
தியாகதுருகம்: புக்குளம் பெரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. தியாகதுருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட புக்குளத்தில் நூற்றாண்டு பழமையான பெரியநாயகி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இது பெரியாண்டார் கோவில் என அழைக்கப்படுகிறது. இக்கோவில் செப்பனிடும் பணி பக்தர்கள் முயற்சியால் நிதி திரட்டி கடந்த ஓராண்டாக நடந்து வந்தது. மூலவர் விமானம் மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் உள்ள தாமரைக் குளம் செப்பனிடப்பட்டது. திருப்பணி வேலைகள் முடிவடைந்த நிலையில் இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடத்தப்படுகிறது. நாளை காலை 9 மணிக்கு கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.