ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வருஷாபிஷேகம் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02பிப் 2023 06:02
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மகா சாந்தி ஹோமத்துடன் வருஷாபிஷேக விழா துவங்கியது. இதனை முன்னிட்டு இன்று காலை திருமுக்குளத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து, யானை ஜெயமால்யதா மீது வைத்து கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. காலை 8:00 மணிக்கு கோயில் மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். அங்கு பாலாஜி பட்டர் தலைமையில் புண்ணியாக வசனம், மகாசாந்தி ஹோமம் மற்றும் திருமஞ்சனம், திருவாராதனம், சாத்துமுறை, தீர்த்த கோஷ்டி நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் செயல் அலுவலர் முத்துராஜா, கோவில் பட்டர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். மூன்று நாட்கள் நடக்கும் விழாவில் நாளை (பிப்ரவரி 3) காலை 108 கலச திருமஞ்சனமும், நாளை பிப்ரவரி 4, விசேஷத் திருமஞ்சனம் மற்றும் இலட்சார்ச்சனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் பட்டர்கள் செய்துள்ளனர்.