பதிவு செய்த நாள்
03
பிப்
2023
03:02
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், நாளை தைப்பூச தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், தைப்பூச திருவிழா, கடந்த, ஜனவரி 29ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில், தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான, தைப்பூச திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம் நாளை நடக்கிறது. இந்தாண்டு, தைப்பூச தேரோட்டத்திற்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பக்தர்கள் வசத்திக்காக, கோவில் நிர்வாகம், போலீசார், மாநகராட்சி, சுகாதாரத்துறை, வனத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில், குடிநீர் வசதி, மலை பாதை சுத்தம் செய்தல், மின்விளக்கு, மருத்துவம், பார்ங்கிங் வசதி உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பாதுகாப்பு பணிகள் குறித்து, மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் துணை கமிஷனர் ஹர்சினி, பேரூர் டி.எஸ்.பி., ராஜபாண்டியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.