பதிவு செய்த நாள்
03
பிப்
2023
04:02
காஞ்சிபுரம் : குன்றத்துார் ஒன்றியம் சோமங்கலம் கிராமத்தில் 950 வருடங்கள் பழமை வாய்ந்த சவுந்திரவல்லி தயார் சமேத சுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் குடமுழுக்கு நடந்து 22 வருடங்கள் ஆகிவிட்டதால், புனரமைப்பு பணிகள் செய்து குடமுழுக்கு செய்ய ஹிந்து அறநிலைய துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதைதொடர்ந்து கடந்த ஜூன் 17ம் தேதிபாலாய சம்ப்ரோக்ஷ்ணம் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து புனரமைப்பு பணிகள் அன்மையில் நிறைவடைந்து கோவிலின் மஹா ஸ்ப்ரோக்ஷணம்(கும்பாபிஷேகம்) விழா பிப்.,1ம் தேதி பூர்ணாஹூதி, யாகசாலை நிர்மாணம், முதல் காலம் பூர்த்தியுடன் துவங்கியது. பிப்.2ம் தேதி புண்யாஹவாசனம், கும்ப திருவாராதனம், அஷ்டபந்தனம் சாற்றுதல், மூன்றாம் கால பூர்த்தி நடைபெற்றது. இதைதொடர்ந்து இன்று கோ பூஜை, கும்ப ஆராதனம், மஹா சங்கல்பம், யாத்ராதானம் பூஜைகள் செய்யப்பட்டு கோவில் கலசத்தில் பட்டாச்சாரியார்காள் புனித நீர் ஊற்றி மஹா ஸம்ப்ரோக்ஷணம்(கும்பாபிஷேகம்) நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். இந்த கோவிலில் விளக்கேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற ஐதீகம் உள்ளது. மேலும், நின்ற நிலையில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளிப்பது இக்கோவிலின் சிறப்பாகும்.