பதிவு செய்த நாள்
04
பிப்
2023
02:02
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உண்டியலில் 94 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனுார் ஜீவானந்தம், விழுப்புரம் விஜயராணி முன்னிலையில் நடந்தது. இதில் பக்தர்கள் -94 லட்சத்து 26 ஆயிரித்து 780 ரூபாய் ரொக்கமும், 221 கிராம் தங்க நகைகளும், 953 கிராம் வெள்ளி நகைகளையும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். துணை ஆணையர் சிவலிங்கம், செயல் அலுவலர் சிவக்குமார், ஆய்வர்கள் சங்கீதா, லட்சுமி, தினேஷ், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம், அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், சரவணன், வடிவேல், கண்காணிப்பாளர் வேலு, மேலாளர் மணி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.