தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூசம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2023 10:02
செஞ்சி: தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் நடந்த தைப்பூச விழாவில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
செஞ்சியை அடுத்த தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச விழா கடந்த 26 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 9 நாட்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், தீபாராதனையும் நடந்து வந்தது. இன்று காலை 5 மணிக்கு தண்டாயுதபாணி சுவாமிக்கு மகா அபிஷேகமும், அலங்காரம் செய்தனர். 8 மணிக்கு தீபாராதனையும், பகல் 12 மணிக்கு காவடி அபிஷேகம், அலகு குத்தி தேர் இழுத்தல், நூற்துக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தில். நடந்தது. மதியம் 1 மணிதண்டாயுதபாணிக்கு சுவாமிக்கு பால் அபிஷேகமும், விபூதி அலங்காரமும் செய்தனர் 3.30 மணிக்கு கோவில் குருக்கல் அருட்பெருஞ்ஜோதி சாமியின் மார்பின் மீது மாவு இடித்தல் மற்றும் மிளகாய் சாந்து அபிஷேகம் நடந்தது. 4.15மணிக்கு செடல் சுற்றுதலும், தீமிதி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.