பதிவு செய்த நாள்
05
பிப்
2023
10:02
பழநி: பழநி தைப்பூசத் திருவிழாவில் பக்தர்கள் குவிந்ததால் திணறியது.
பழநியில் ஜன.29 ல் பெரிய நாயகி அம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா துவங்கியது. தைப்பூசத்தை முன்னிட்டு வெளிநாடு, வெளி மாநில, வெளி மாவட்ட, பக்தர்கள் அதிகளவில் பழநிக்கு வருகை புரிந்தனர். பாதயாத்திரையாக வந்த பக்தர்கள், காவடியுடன் வருகை புரிந்தனர். பிப்.3 முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம், பிப்.4ல் தைப்பூச தேரோட்டம் நடந்தது. இன்று (பிப்.5 ல்) லட்சக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். திருஆவினன்குடி கோயிலில் இருந்து சன்னதி வீதி, பாத விநாயகர் கோயில், வடக்கு கிரி விதி, குடமுழுக்கு நினைவரங்கு மண்டபம் வழியே யானை பாதை அடைந்து மலைக்கோயில் சென்றனர். அதிகாலை முதல் சன்னதி வீதியில் பக்தர்கள் காத்திருந்தனர். சன்னதி வீதியில் கூட்டம் அதிகம் இருந்ததால் பல கடைகள் அடைக்கப்பட்டன. சன்னதி வீதியில் குடிநீர், கழிப்பறை வசதி இன்றி பக்தர்கள் அவதிப்பட்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்புடன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்கள் மலைக்கோயில் அனுப்பினர்.
மலைக்கோயிலில் இருந்து படிப்பாதை வழியாக பக்தர்கள் கீழே இறங்க அனுமதிக்கப்பட்டனர். 6 மணிநேரத்திற்கும் மேல் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அனைத்து பேருந்துகளும் பழநி மத்திய பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்ததால் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் இருந்தது. போதுமான பேருந்து வசதி இல்லாததால் பக்தர்கள் அவதி அடைந்தனர். நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டதால் உள்ளூர் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர் செல்லும் பேருந்துகள் வழியில் உள்ள ஊர்களுக்கு செல்லும் பக்தர்களை பேருந்து ஏற்ற தயங்கினர். பாதயாத்திரை வந்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.